Wednesday, December 27, 2023

Kolinjivadi - The Name and its Fame


கொழிஞ்சிவாடியில் உள்ள சொக்கநாதர் கோவில் சன்னதியின் வாயிலில் காணப்படும் கல்வெட்டு: 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர பாண்டியன் காலத்தில் காவன்-சடையம்மை வெள்ளாள தம்பதியினர் திருநிலைக்கால்(தூண்கள்) தர்மம் கொடுத்தது.




க. விஜய நகர வேந்தன் தேவராயன் - 15ம் நூற்றாண்டு காலத்தில் இவ்வூரின் (கொழிஞ்சிப்பாடி) பெயர் நரையனுர் நாடு - உடையபிராட்டி சதுர்வேதிமங்கலம் என்பதாகும் . இந்த கோவிலின் பெயர் - அழகிய சொக்கனார் கோவில் , அருகில் உள்ள இடம் அழகிய சொக்கபுரம் (இன்றைய மீனாட்சிபுரம் - சொக்கநாதபாளையம்) .



14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர பாண்டிய தேவரின் உபய கல்வெட்டு



கோயில் துலுக்கவாணத்தில் இறங்கல்பட்டு அதாவது இஸ்லாமியர் வெடியால் இடிந்துபட மாயநாயக்கருக்கு தர்மமாக தரங்கையா மன்றாடியார் திருப்பணி செய்து சீர்செய்தமையைக் குறிப்பிடுகிறது.