Monday, March 25, 2019

ஸ்ரீராமநவமி உற்சவம் - 2019



ஸ்ரீ ராம ஜெயம்!
ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா!

               அன்பார்ந்த பக்தகோடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம். மகாபாரத காலத்தில், விராடபுரம் என்னும் பெயரில் பஞ்ச பாண்டவர்களுக்கு, அஞ்ஞாத வாசம் காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த ஊரான தாராபுரம், உத்தரவாகினி ஆன அமராவதியும் (அதாவது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஆறு பாய்வது என்பது மிகவும் புண்ணியமாகும் மற்றும் அபூர்வமானதும்) , வ்யாஸராய தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காடு அனுமந்தராய ஸ்வாமி திருக்கோயில் மற்றும் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் போன்ற பழமையான திருக்கோயில்களும் அமைந்த ஊர் .

              மிகவும் புகழ்பெற்ற அகஸ்தீஸ்வரர் கோவில் ஒரு கரையிலும் அமராவதி ஆற்றின் மறு புறம் மிக சிறப்பான வடிவமைப்பு கொண்ட கொளிஞ்சிவாடி கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் என்கின்ற வேணுகோபால சுவாமி திருக்கோயிலுமாகும்.

         கேட்டவர்க்கு கேட்கும் வரம் அருளும் இக்கோவிலில் கடந்த 80 வருடங்களாக ஸ்ரீராமநவமி உற்சவம் பத்து நாட்களுக்கு மேல் சீதா கல்யாண வைபவத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. சமீபகாலமாக போதிய ஆள் வசதி இல்லாததாலும் வேறு சில காரணங்களாலும் ஓரிரு வருடம் தடை ஏற்பட்டது. எம்பெருமான் அனுகிரகத்தால் எல்லோர் மனதிலும் ஏற்பட்ட உத்வேகத்தில், மேற்படி ஸ்ரீராமநவமி மற்றும் சீதா கல்யாண வைபவம் நிகழும் விகாரி வருடம் சித்திரை மாதம் 21, 22-ஆம் நாள் ஆங்கில மாதம் மே 4 மற்றும் 5, 2019 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

திருச்சி ஸ்ரீமான் ரமணி பாகவதர் அவர்கள் தலைமையில் சம்பிரதாய பஜனை மற்றும் சீதா கல்யாண உற்சவம் நடத்தி கொடுக்க இசைந்துள்ளார்கள். ஆகவே பக்தகோடிகள் அனைவரும் நேரில் வருகை தந்து மேற்படி வைபவத்தில் கலந்துகொண்டு எம்பெருமான் அனுக்கிரகத்திற்கு பாத்திரமாகும்படி வேண்டிக் கொள்கிறோம்.


இப்படிக்கு,
பக்த கோடிகள்


தொடர்புக்கு: சந்திரா அனந்தநாராயணன்
கொளிஞ்சிவாடி
9488503866
80729 46479


Regards,
Charu

No comments:

Post a Comment